தமிழ் வருட பிறப்பு பூஜை செய்ய நல்ல நேரம்

தமிழ் வருட பிறப்பு பூஜை செய்ய நல்ல நேரம்

சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுவது நம்முடைய வழக்கம் இந்த வருஷம் தமிழ் வருடத்தின் பெயரும் பூஜை நேரமும் பூஜையில் வைக்க வேண்டிய முக்கியமான நிவேதனம் என்ன இதெல்லாம் பார்க்கலாம்.

இந்த வருஷம் தமிழ் வருடத்தின் பெயர் பிலவ வருடம் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆண்டுகள் இதுல 35 வது வருஷம் தான் இந்த வருஷம் வருடப்பிறப்பு. அதாவது 14. 4.2021 சித்திரை முதல் நாள் அன்னைக்கு பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரம் என்னன்னு பார்த்தோம்னா 9:30 ல இருந்து பத்து முப்பது மணி வரைக்கும் பூஜை செய்ய நேரம்.

அன்னைக்கு ராகு காலம் மதியம் 12 மணியிலிருந்து ஒரு முப்பது மணி வரைக்கும் இருக்கு எமகண்டம் காலை ஏழு முப்பது மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் இருக்கு.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருப்பதால் அன்னைக்கு வந்து அறுசுவை உணவுகளை செய்யணும் அதாவது இனிப்பு கசப்பு உவர்ப்பு புளிப்பு துவர்ப்பு கார்ப்பு என அறுசுவை உணவில் இருக்கும்.

இறைவனுக்கு கிடைக்கக்கூடிய நெய்வேத்தியம் பானகம் நீர் மோர் மற்றும் மா பலா வாழை மாம்பழம் வாழைப்பழம் வைக்க வேண்டும் புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையும் தரக்கூடிய இந்தப் பிலவ வருடம் மகிழ்ச்சியோடு வரவேற்கலாம்.