பணக் கஷ்டம் தீர வேண்டுமா வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள்

பணக் கஷ்டம் தீர வேண்டுமா வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள்

வீடுகளில் பொதுவாகவே ஒவ்வொரு நாளுமே நாம் பூஜை செய்து வருகிறோம் ஆனால் இப்போது இருக்கும் இந்த பல சூழலில் எத்தனை பேர் ஒவ்வொரு நாளும் வீடுகளில் பூஜை செய்கிறார்கள் என்று கேட்டால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இதற்காக நாம் யாரையும் குறை சொல்லவில்லை காரணம் கணவன் மனைவி இருவருமே இந்த காலத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் சூழ்நிலையில் உள்ளது.

நேரத்தை ஒதுக்க வேண்டும் என்னதான் மற்ற கிழமைகளில் நமக்கு நேரமே இல்லை என்று வெள்ளிக்கிழமை எப்படியாவது நமது நேரத்தை ஒதுக்கி கண்டிப்பாக பூஜை செய்யவேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் காலை மாலை என இருவேளைகளிலும் உங்களால் வீட்டில் பூஜை செய்ய இயலவில்லை என்றாலும் ஒரு வேளையாவது வீட்டில் பூஜை செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் பூஜை செய்ய ராகு எமகண்ட இந்த நேரங்களை தவிர்த்து விடுங்கள்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை பூஜை என்பது மிகவும் விசேஷம் நிறைந்தது அப்படியே தவிர்க்க முடியாத காரணத்தால் நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் ஒன்று காலையிலேயே பூஜைகளை முடித்து விடுங்கள்.

பூஜையை செய்யுங்கள் காரணம் வெள்ளிக்கிழமை பூஜை என்பது மகாலட்சுமி தாயார் உட்பட மற்ற எல்லா தெய்வங்களையும் வழிபட மிகவும் சிறந்த ஒரு நாள் ஆகும்.

வெள்ளிக்கிழமை சுவாமிகள் பொங்கல் தயார் செய்ய நேரம் இல்லை என்றால் அன்றைய நாளில் நிவேதனமாக பழம் பால் காய்ந்த திராட்சை கற்கண்டு உங்களால் எது முடியுமோ அதனை நிவேதனமாக வைத்து அன்றைய வெள்ளிக்கிழமை பூஜையை சிறப்பாக செய்து விடுங்கள்.

என்னதான் நமக்கு வேலை செய்வதால் நேரமில்லை என்றாலும் கூட இந்த வெள்ளிக்கிழமை பூஜை மட்டும் தவறாது செய்து மகா லட்சுமி தாயாரின் முழு ஆசியைப் பெறுவோமாக.