வைட்டமின் டி குறைபாடு காட்டும் அறிகுறிகள்

வைட்டமின் டி குறைபாடு காட்டும் அறிகுறிகள்

முதலாவதாக பலவீனமான தசைகள் எந்த ஒரு வேலையும் செய்யாத நிலையிலும் கூட தசைகள் மற்றும் எலும்புகளில் அதிக வலி மற்றும் நடக்கும்போதோ படிக்கட்டுகளில் ஏறும் பொழுது உங்களுக்கு தொடர்ச்சியாக தசை வலி அல்லது மூட்டு வலி இருந்தால் உங்களுக்கு வைட்டமின்-டி பற்றாக்குறையாக இருக்கலாம்.

அடிக்கடி நோய்வாய்ப்படும் போது கூடிய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம் சிலருக்கு அடிக்கடி சளி காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் அதற்கு உடலில் போதிய அளவு நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாததுதான் காரணம்.

எனவே நீங்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதாக உணர்ந்தால் உங்களுக்கு வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கலாம் உடல்சோர்வு எல்லா நேரங்களிலும் எந்த ஒரு வேலையும் செய்ய ஆர்வம் இல்லாமல் சோர்வாக இருந்தாலும் உங்களுக்கு வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

நாள் முழுவதும் சோர்வு வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் காலை நேரங்களில் குறைந்தது அரை மணி நேரமாவது சூரிய ஒளி நேரடியாக உடலில் படுமாறு நிற்பது வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட முடியும் இப்படியாக காயங்கள் குணமாவதற்கு நீண்ட காலம் ஆகுதல் நோய் இருந்தால் மட்டுமல்ல வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும்கூட புண்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் ஏற்படும் பொழுது அவை ஆறுவதற்கு நீண்ட காலம் ஆகும்.

அடுத்து முடி உதிர்வு சிலருக்கு காரணம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்படும் ஊசி மாசுக்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் ஷாம்பு இவைகள் மட்டும் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவை எல்லாவற்றையும் விட ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.

அதிகமாக முடி கொட்டினால் அது உங்கள் உடலில் தேவையான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லை என்பதற்கான அறிகுறியாக கூட எடுத்துக் கொள்ளலாம் அடுத்து சரும பிரச்சனைகள் வைட்டமின் டி சத்துக் குறைபாடு உண்டாகும் பொழுது சருமம் சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் சருமத்தில் தடிப்புகள் கட்டிகள் வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை வைட்டமின் சத்து குறைபாடு உண்டாகும்.

சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வது உங்கள் உடலுக்கு போதிய வைட்டமின் டி சத்து கிடைக்கும் மதிய நேரத்தில் வெயில் கடுமையாக இருக்கும் பொழுது புற ஊதாக் கதிர்கள் தாக்கி சருமத்தைப் பாதிக்கும் ஆனால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி அளவில் 40 சதவிகிதத்தை உங்களால் பெற முடியும்.

வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும் பொழுது எலும்புருக்கி நோய்கள் உண்டாகும் இதற்கு கால்சியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வைட்டமின் டியும் முக்கியம் ஏனென்றால் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய கால்சியம் சத்து எலும்புகளில் சென்று சேர்வதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமான ஒன்று.