மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 31 பேர் பலி

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 31 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மாலியில் சனிக்கிழமை பேருந்து ஒன்றை பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தி தீவைத்தனர். இதில் அதன் ஓட்டுநர் உள்பட 31 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் ஏராளமான பெண்களும் அடங்குவர். வேலைக்காக சென்ற இடத்தில் அவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழக்க நேர்ந்ததாக அவர்களது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.