நான் ஒரு திருநங்கையா?

நான் ஒரு திருநங்கையா?

கொந்தளிக்கும் பிரான்ஸ் அதிபரின் மனைவி

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். இவருக்கு வயது 44. இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் அதாவது சுமார் பதினைந்து வயதில், ஏமியன்ஸ் நகரில் உள்ள பள்ளியில் பயின்றபோது, நம்ம ஊர் பிரேமத்தையும் கடந்து, அதே பள்ளியில் பணியாற்றி வந்த 39 வயது ஆசிரியையுடன் காதல் வயப்பட்டார்.

இந்த காதல் விவரம் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் மகனின் விபரீத எண்ணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். காரணம் இமானுவேல் மேக்ரோனை விட அந்த ஆசிரியை 24 வயது பெரியவர் என்பதால், சமூகத்தின் ஏளனத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பெற்றோர் இந்த காதலுக்கு சிவப்புக் கொடி காட்டினார்.

இதனால் இம்மானுவேல் மேக்ரானை தலைநகர் பாரிஸில் உள்ள பள்ளியில் சேர்த்து பள்ளிப் படிப்பை முடிக்க செய்தனர். ஆனாலும் அவர்களின் காதல் நின்றுவிடவில்லை. ஐரோப்பிய சட்டப்படி, தனக்கு 18 வயது பூர்த்தி ஆனதும் இமானுவேல் மேக்ரான் அந்த ஆசிரியை பிரிகேட்டை கடந்த 2007ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் நீதித்துறை ஆய்வாளராக பணியில் சேர்ந்த மேக்ரான், படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் அடைந்து இன்று பிரான்ஸ் அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டார்.

இந்தச் சூழலில்தான் அவரது மனைவியான 68 வயது பிரிகேட் மேக்ரானின் வாழ்வில் புயல் வீச தொடங்கியுள்ளது.

அதாவது பிரான்ஸைச் சேர்ந்த நடாச்சா ராய் என்ற பத்திரிகையாளர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மனைவி ஒரு திருநங்கை. அவரது உண்மையான பெயர் பிரிகேட் டிரோக்யூனிக்ஸ். அவர் பிறக்கும்போது ஆணாக பிறந்தார். வளர்சிதை மாற்றம் காரணமாக அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக நாளடைவில் திருநங்கையாக மாறினார். இந்த சமயத்தில் ஜீன் மைக்கேல் என்று அவர் அனைவராலும் அறியப்பட்டார் என்று புயலைக் கிளப்பினார்.

அவரது ட்விட்டை 65 ஆயிரத்து 300 பேர் பகிர்ந்தனர். ஒரு லட்சத்து 74 ஆயிரம் பேர் லைக் போட்டனர். இதனால் இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி விவாத பொருளாக உள்ளது.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அதிபரின் மனைவி, சம்பந்தப்பட்ட நபர் மீது சிவில் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார். இந்தத் தகவலை அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரான்சை பொருத்தவரை பிரபலங்கள் மீது இதுபோன்ற வதந்திகளை பரப்புவது மிகவும் அரிதான செயல் ஆகும். இதற்கு முன்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மனைவி மிச்செலி ஒபாமா, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உள்ளிட்ட பெண்களும் இதுபோன்ற இழிவான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஆனால் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அதிபரின் மனைவியின் பாலினத்தை கேள்விக்குள்ளாக்கி இருப்பது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் அதிபர் இதுபோன்ற வன்மத்தை எதிர்கொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கெனவே கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அவர் ஒரு ஹோமோ செக்ஸுவல் பெர்ஷன் என பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதிலிருந்து அவர் விடுபட்டு தன்னை பரிசுத்தவானாக பிரகடனப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இந்த நிலையில்தான் அடுத்த ஏப்ரலில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் கொண்டு, அதிபரின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில், சமூக விரோதிகள் இதுபோன்ற போலி செய்திகளை பரப்புவதாக பிரான்ஸில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.