வீடியோ காலில் அமெரிக்க அதிபரை கலாய்த்த நபர்

வீடியோ காலில் அமெரிக்க அதிபரை கலாய்த்த நபர்

கிறிஸ்துமûஸ முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பதிகளுடன் நேற்று வீடியோ காலில் பேசி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, அந்தக் குடும்பத் தலைவன் 'லெட்ஸ் கோ, பிராண்டன்' என அதாவது 'பிராண்டனே! வாருங்கள், போகலாம்' என நக்கலாக கலாய்த்தார்.

பைடனின் பெயரை இவ்வாறு அவர் அடைமொழியாக குறிப்பிட்டதை உணராத ஜோபைடனும், அதற்கு சரியென்று தலையையாட்டினார். அதாவது, தான் கலாய்க்கப்படுகிறோம் என்பதை அவர் அறியாமலேயே இவ்வாறு பதிலளித்தது ஜில் பைடனுக்கு சிரிப்பை வரவழைத்தது. இந்தக் காட்சி அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் வியக்கவைத்தது.