அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட இயலாமல் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்தனர்.

குறிப்பாக நேற்றும், இன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை அமெரிக்க விமான நிறுவனங்கள் ரத்து செய்தன. இதற்கான அறிவிப்பு விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வந்து விமானம் ரத்து செய்யப்பட்டதை அறிந்து ஏராளமான பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப நேர்ந்தது.

விமானங்களில் பணியாற்றும் சிப்பந்திகளுக்கு கொரோனா உறுதியானதால் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப் பட்டனர். இதனால், விமான சேவைகளை தொடர்ந்து நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால் சேவையை ரத்து செய்ய நேரிட்டதாக விமான நிறுவனங்கள்  தெரிவித்துள்ளன.