பிரான்ஸில் ஓநாய்கள் தப்பியோடியதால் வனவிலங்கு சரணாலயம் மூடல்

பிரான்ஸில் ஓநாய்கள் தப்பியோடியதால் வனவிலங்கு சரணாலயம் மூடல்

தெற்கு பிரான்ஸின் மாண்ட்ரெட்டன்- லேபஸ்ஸோனி பகுதியில் ட்ராய்ஸ் வல்லீஸ் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கிருந்து 9 ஓநாய்கள் சமீபத்தில் பார்வையாளர்கள் நேரத்தின்போது தப்பியோடின. அதிர்ஷ்டவசமாக யாரையும் ஓநாய்கள் கடித்துக் குதறவில்லை. இதனால், அந்த சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஓநாய்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.