32 ஆண்டுகள் சேவையாற்றிய கடற்படை கப்பலுக்கு பிரியாவிடை

32 ஆண்டுகள் சேவையாற்றிய கடற்படை கப்பலுக்கு பிரியாவிடை

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் குக்ரி,  32 ஆண்டுகள் கடற்படையில் சேவையாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றது.
இந்தக் கப்பல் மும்பையில் உள்ள  மஜ்காவ் யார்டு கப்பல்கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்டது. மேற்கு, கிழக்கு கடற்பகுதியில் இக்கப்பல் பல்வேறு பணிகளில் திறம்பட செயல்பட்டுள்ளது.

32 ஆண்டுகால சேவையில், 6,44,897 நாட்டிக்கல் மைல் இந்தக் கப்பல் பயணித்துள்ளது. இந்தத் தொலைவு என்பது உலகை 30 முறை சுற்றி வருவதற்கு சமம். நிலவுக்கும், பூமிக்கும் இடையிலான தொலைவில் மூன்று மடங்குக்கு சமமாகும்.
இந்த ஐஎன்எஸ் குக்ரி கப்பல் பணியிலிருந்து பிரியாவிடை பெற்றது. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதில் கட்டப்பட்டிருந்த தேசியக்கொடி, கடற்படை கொடிகள் கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டன.