விண்வெளி நோக்கி பயணிக்கும் ராட்சத தொலைநோக்கி

விண்வெளி நோக்கி பயணிக்கும் ராட்சத தொலைநோக்கி

பிரான்ஸ்சில் கடந்த 30 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி இன்று இரவு 9.20 மணிக்கு கவுரவ் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விண்வெளியை நோக்கி பயணிக்க உள்ளது.

பிரெஞ்சு கினியாவில் இருந்து ஐரோப்பிய ஏரியான் ராக்கெட் மூலமாக இந்த தொலைநோக்கி விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த தொலைநோக்கி 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது 21ஆம் நூற்றாண்டில் இணையற்ற அறிவியல் கண்டுபிடிப்பு என விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில் விண்ணில் தோன்றும் விண்மீன் திரள்களின் ஆரம்ப நிலையை கண்டறிந்து, அதன் தொடக்க நிலையை படம்பிடித்து உதவ இந்த தொலைநோக்கி உதவும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் நட்சத்திரங்களுக்கு இடையிலான தொலைவையும் இந்த தொலைநோக்கி அறுதியிட்டு கூறும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.