ஆகஸ் ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்பு பெருகும்


பிரிட்டன் அறிவிப்பு

ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை அளிக்க அமெரிக்காவும், பிரிட்டனும் அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஆகஸ் ஒப்பந்தத்தை சீனாவும், பிரான்சும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், ஆகஸ் ஒப்பந்தம் பயன்பாட்டுக்கு வந்தால், நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இந்த ஒப்பந்தத்தால் எந்த நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.