மெர்க் & கோ மருந்தை ரத்து செய்தது பிரான்ஸ்

மெர்க் & கோ மருந்தை ரத்து செய்தது பிரான்ஸ்

கொரோனா தொற்றுக்கு எதிராக திறம்பட செயலாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட மெர்க் & கோ மருந்து அதன் பரிசோதனையில் வெறும் 30 சதவீதம் மட்டுமே செயல்படுவது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த மருந்துக்காக 50 ஆயிரம் டோஸ் பிரான்ஸ் ஆர்டர் செய்திருந்த நிலையில் அதன் பரிசோதனையில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால் ஆர்டரை ரத்து செய்வதாக பிரான்ஸ் சுகாதார துறை அமைச்சர் ஓலிவர் வெரன் தெரிவித்துள்ளார்.