கடைசி நேரத்தில் உள்துறை அமைச்சர் ராஜினாமா

கடைசி நேரத்தில் உள்துறை அமைச்சர் ராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ப்ரீத்தி பட்டேல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கும், புதிய பிரதமர் லிஸ் டிரசுக்கும் ஆகாது. இதனால் இன்று அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் ப்ரீத்தி பட்டேலுக்கு வாய்ப்பளிக்க போவதில்லை லிஸ் டிரஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார்.

அதேசமயம் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் இடம்பெறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த பிரீத்தி பட்டேல், தனது ராஜினாமா கடிதத்தை போரிஸ் ஜான்சனிடம் நேற்று வழங்கினார். அதில் பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தது எனக்கு மிகப்பெரிய கௌரவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ரீத்தி பட்டேல் 2019 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.