ஓமைக்ரானை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ரிஸ்க் கம்மி

ஓமைக்ரானை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ரிஸ்க் கம்மி

தென் ஆப்பிரிக்க நிறுவனம் தகவல்

ஓமைக்ரான் பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் சூழல் ஏற்படாது என்று தென் ஆப்பிரிக்காவின் தொற்றுநோய்களுக்கான தேசிய ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை அந்நாட்டில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு தீவிர பாதிப்பை எதிர்கொள்ளவில்லை என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.