நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை சாவி ஏலம்

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை சாவி ஏலம்
நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை சாவி ஏலம்

தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் நெல்சன் மண்டேலா. இதற்காக இவர் அந்நாட்டிலுள்ள ராபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், மக்களின் மகத்தான ஆதரவுடன் அந்நாட்டின் அதிபராக உயர்ந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு அந்த சிறைக்கு சென்று அவர் தங்கியிருந்த அறையை பார்வையிட்டார்.

இத்தகைய பெருமை வாய்ந்த அந்த சிறை அறையின் சாவி அதன் முன்னாள் பாதுகாவலர் கிறிஸ்ட் பிராண்ட் என்பவரிடம் உள்ளது.

நெல்சன் மண்டேலா தங்கியிருந்த சிறை அறையின் சாவியை ஜனவரி 28ஆம் தேதி நியூயார்க்கில் ஏலத்தில் விட இவர் முடிவு செய்துள்ளார். இந்தத் தொகையை வைத்து மண்டேலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பிரம்மாண்ட தோட்டத்தையும், அருங்காட்சியகத்தையும் அமைக்க இவர் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் மண்டேலா தங்கியிருந்த சிறைச்சாலை அறையின் சாவியை ஏலத்தில் விடுவதற்கு தென்னாப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் நத்தி மித்தேத்வா கூறும்போது, மண்டேலா சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையின் சாவியை ஏலத்தில் விடுவது தொடர்பாக எங்களிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆலோசனை நடத்தவில்லை. அந்த அறையின் சாவி தென் ஆப்பிரிக்க மக்களுக்கு சொந்தமானது. அது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. எனவே ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.