in ,

மன்னர் பிறந்தநாள் விழாவில் 40 இந்திய மருத்துவர்கள் கவுரவிப்பு | 40 Indian doctors felicitated

https://youtu.be/5IcT0a7yE50%5B/embed%5D

மன்னர் பிறந்தநாள் விழாவில் 40 இந்திய மருத்துவர்கள் கவுரவிப்பு

இங்கிலாந்து மன்னர் பிறந்தநாள் விழாவில் 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கௌரவிக்கப்பட உள்ளார்.

இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ் தனது 74வது பிறந்தநாளை வரும் நவம்பர் 14இல் கொண்டாட உள்ளார். இவர் பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

அந்த வகையில், இதுவரை பரிந்துரைக்கப்பட்ட குழு பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு லண்டனில் இங்கிலாந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பணியை வெளிப்படுத்தியுள்ளனர். 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள்.

இந்த பட்டியலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, அனுஜ் சண்டே, ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் ஆகியோர் உள்ளனர். இதற்கான பட்டியலை இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

What do you think?

காசு வாங்கி கொண்டு ஓட்டு போட வேண்டாம் | Don’t vote with money | Britain Tamil News

சீனா ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.