Watch – YouTube Click

ஐரோப்பிய செய்திகள்

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்று சுமார் 130 பேரை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஒரு தீவை அடைய முயன்றபோது கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடலில் படகு மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் பலரைத் தேடி வரும் நிலையில், கடல் சீற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய படகில் அதிகமானோர் பயணித்ததும், அது பயணிகளுக்கான படகு அல்ல என்பதும் இந்த விபத்துக்கான காரணம் என்கின்றனர்.

பெரும்பாலானோர் காலரா நோய் பீதியின் காரணமாக பயந்து இந்த படகு மூலம் தப்பிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்க நாடு, அக்டோபரில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதில் குறிப்பாக மொசாம்பிக்கின் நம்புலா மாகாணம் காலரா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு நம்புலா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், காலரா பீதியின் காரணமாக படகு மூலம் தப்பிக்க முயன்றவர்கள் விபத்தில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

உக்ரைனில் அணுவாலையில் ட்ரோன் தாக்குதல்

உக்ரேனின் முக்கிய நகரமான சபொரிஷா அணு ஆலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் உக்கிரன் ரஷ்யா போர் இன்னும் உச்ச கட்டத்தை எட்டி விட்டது. ரஷ்யாவும் உக்கிரேனும் இதுபோல அணு ஆலை மீது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதப் போருக்கு இது வழி வகுக்க கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

தெற்கு காசாவின் துருப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது இஸ்ரேல்

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீனம் தான் முதலில் போரை தொடங்கினாலும் இஸ்ரவேல் இப்போது பாலஸ்தீனத்தை ஓட ஓட விரட்டியடிக்கிறது.

மேலும் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய
ஏராளமான மக்கள் கொத்து கொத்தாக செத்தனர்.

இதில் ஐநா தலையிட்டு ஊரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது.

அதன்படி தெற்கு காசாவில் இருந்து பெரும்பாலான படை வீரர்களை இஸ்ரேல் ராணுவம் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டது.

 

கஜகஸ்தானில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு

ரஷ்யாவில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணி தொய்வு

கஜகஸ்தானில் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரும்பாலான மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதன் எல்லை பகுதி ரஷ்யா உடன் தொடர்பு கொண்டு இருப்பதால் ரஷ்யாவில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் தற்போது தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

வெளியுறவுத் துறை அலுவலகங்களை மூட வேண்டும் என முன்னாள் தூதர்கள் குழு வலியுறுத்தல்

இங்கிலாந்தில் வெளியுறவுத்துறை அலுவலகங்கள் இந்தியா உள்பட ஏராளமான நாடுகளில் அமைந்துள்ளன.

இந்த வெளியுறவுத்துறை அலுவலகங்களை மூடிவிட்டு அதற்கு பதிலாக சர்வதேச விவகாரங்கள் துறை அலுவலகத்தை தொடங்க வேண்டும் எனவும் அங்கு காலனிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொங்க விட வேண்டும் எனவும் முன்னால் தூதர்கள் சங்கத்தினர் பிரிட்டன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

லண்டனில் ரயில் ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் பயணிகள் பரிதவிப்பு

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தி பயணிகள் ரயில் ஓட்டுநர்கள் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

மொத்தம் 16 சங்கங்களைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர்கள் இவ்வாறு போராட்டத்தில் குடித்தனர்.

அந்த வகையில் லண்டனிலும் இன்று ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பொதுமக்கள் ரயில் கிடைக்காமல் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

மேலும் பொதுமக்கள் ரயில் நிலையத்துக்கு செல்லும் முன்பாக அந்த ரயில் அங்கு வருகிறதா என்பதை சம்பந்தப்பட்ட App இல் கண்டறிந்த பின்னரே ரயில் நிலையத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

இஸ்ரேலுக்கு சட்டபூர்வமாகத்தான் பிரிட்டன் ஆயுத உதவி செய்து வருகிறது துணை பிரதமர் பேட்டி

ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடந்து வருகிறது.

உக்ரேனுக்கு ஆதரவாக பிரிட்டன் ஆயுதங்கள் சப்ளை செய்து வருகிறது.

எனவே இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால் உக்ரையனுக்கு உதவுவதை பிரிட்டன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக காசா போரில் இங்கிலாந்து சேர்ந்த ஏழு பேர் பலியான நிலையில், சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்த தவறி விட்டதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிபுணர்கள் இவ்வாறு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு உதவுவதை பிரிட்டன் நிறுத்த வேண்டும் என கூறுவது வெட்கக்கேடானது என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,இஸ்ரேலுக்கு சட்டபூர்வமாகத்தான் பிரிட்டன் ஆயுத உதவி செய்து வருகிறது என பிரிட்டன் துணை பிரதமர் ஆலிவர் டவுடன் பீபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

லண்டனில் ஒருவர் குத்திக் கொலை

லண்டன் தொட்டேன்ஹாம் அருங்காட்சியகம் அருகே ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Watch – YouTube Click