in ,

ஐரோப்பிய செய்திகள்


Watch – YouTube Click

ஐரோப்பிய செய்திகள்

 

இஸ்ரேலில் 20க்கும் மேற்பட்ட பிரிட்டனை சேர்ந்தவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்

இஸ்ரேல் காசா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் பணியாற்றி வரும் பிரிட்டனை சேர்ந்த ராணுவ வீரர் நாத்தானெல் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக பெர்நாடு என்ற ராணுவ வீரரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்தச் சூழ்நிலையில் இஸ்ரவேலில் மேலும் பிரிட்டனைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் டார்லிங் டன் என்பவரும் உயிரிழந்து விட்டார்.

இஸ்ரேல் போரில் இதுவரை 1200க்கும் அதிகமானோர் உயிர் இழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூத்தான் விமான நிலையத்தில் தீ விபத்து

பிரிட்டன் லூத்தான் விமான நிலையத்தில் நேற்று பகலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் அந்தப் பகுதி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதன் காரணமாக அங்கு விமான சேவை சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீச்சு அடித்து தீயை அணைத்தனர்.

மாணவர்களுக்கு உண்மையான கணக்கு பாடத்தை போதிக்க வேண்டும் லேபர் கட்சி வலியுறுத்தல்

லேபர் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பிரிட்ஜெட் பிலிப் பேசினார்.

அதlப்போது மாணவர்களுக்கு வாழ்க்கையை புரிந்து கொள்ளக்கூடிய கணக்கு பாடம் போதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் பட்ஜெட் தயாரிப்பது, வரிவிதிப்பு முறை ஆகியவை பற்றி மாணவர்களுக்கு நான்கு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

 

பிரிட்டனில் இஸ்ரேல் கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்

பிரிட்டனில் இஸ்ரேல் காசா போரை கண்டித்து ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஷேப்பில்ட் டவுன்ஹாலில் ஏற்றப்பட்டிருந்த இஸ்ரேல் கொடியை போராட்டக்காரர்கள் ஏறி அங்கிருந்து அகற்றினார்.

இந்த சம்பவத்தில் இருவருக்கு தொடர்பு இருப்பதாக சவுத் யோர்க் சயர் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மார்ஷ்மால்லோ சாப்பிட்ட பெண் பரிதாப சாவு

சவுத் வேல்ஸ் ரொண்டா கைநோன் டாப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் 37 வயது மதிக்க பெண் ஒருவர் சமீபத்தில் மார்ஷ் மால்லோ சாப்பிட்டார். பத்து வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

அப்போது அளவுக்கு அதிகமாக மார்ஷ் மேலோ சாப்பிட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி கற்பழிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் விடுதலை

இங்கிலாந்தின் மிட்ளோபியன் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் சீன் பாக். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை கற்பழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து சீன் பாக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவருக்கு சிறந்த தண்டனை விதிக்காமல் 270 மணி நேரம் சமுதாய சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பாக் மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த நீதிபதி அவரை விடுவித்து தீர்ப்பளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

பிரபல நாகினி சீரியல் நடிகையின் உறவினர்கள்இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்

முட்புதரில் கிடந்த உண்டியல் திருச்சி சமயபுரத்தில் பரபரப்பு