in ,

அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு


Watch – YouTube Click

ஸ்ரீவில்லிபுத்தூர் முக்கிய பிரதான சாலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கூறி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்குளம் அட்டை மில் அருகே புதியதாக கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரியில் ஏரளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரிக்கு செல்வதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள் சென்று வருவதற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய அரசு பேருந்தில் ஏராளமான மாணவர்கள் ஏறியதால் பேருந்து சரியான கட்டுப்பாட்டு இல்லாமல் சென்றுள்ளது .

இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்,நடத்துனர் மாணவர்களை இறக்கி விட்ட நிலையில் பிரதான சாலையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை விடுத்தனர்.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க தற்காலிக வழிவகை செய்த நிலையில் போராட்டத்தை கைவிடப்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது

இந்திய நாடாளுமன்ற தேர்தல் – 2024 முக்கிய அம்சங்கள் | Indian Parliamentary Elections-2024