in

ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய அதிகாரிகள் வந்ததால் சாலை மறியல் பரபரப்பு


Watch – YouTube Click

செஞ்சி அருகே அரசு கலைக்கல்லூரி கட்ட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய அதிகாரிகள் வந்ததால் ஆக்கிரமிப்பாளர்கள் சாலை மறியல் பரபரப்பு ….

விழுப்புரம் சாலையில் சிட்டாம்பூண்டி அருகே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு நாளை பூமி பூஜை போடப்பட உள்ளது.

இந்நிலையில் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒன்பது குடும்பங்களுக்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டா கொடுக்க அவனம் செய்யப்பட்டது.

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அதில் இரண்டு பேர் பட்டாக்களை பெற்றுக் கொண்டனர்.

மீதமுள்ள ஏழு பேர் குடியிருப்புகளை காலி செய்யாமல் இருந்தனர். எனவே அந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

திண்டிவனம் உதவி கலெக்டர் திவ்யன்ஷி நிகாம் , செஞ்சி தாசில்தார் ஏழுமலை துணை போலீஸ் கண்காணிப்பாளர் கவினா ஆகியோர் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர்,மின் துறையினர்,தீயணைப்பு துறையினர், தயார் நிலையில் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் உடன் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது

ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிரமிப்பில் உள்ள குடும்பத்தினர் பெண்கள் உட்பட செஞ்சி விழுப்புரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் கட்டைகளையும் குறுக்கே போட்டு சாலை மறியல் செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளில் இருந்த வீட்டு பொருள்களை வருவாய்த்துறையினர் கிராம உதவியாளர்,கிராம அலுவலர், வருவாய் ஆய்வாளர்,உள்ளிட்டோர் வெளியே எடுத்து வைத்துவிட்டு வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து மாடிவீடு உட்பட ஏழு வீடுகளும் முழுவதுமாக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றப்பட்டன’ இருந்தும் அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

என் பாடலை பயன்படுத்துபவர் ஆண்மை இல்லாதவர்கள்..என்ன பதில் கூற போகிறார் இளையராஜா

வகுப்புகளுக்கான தேர்வுகள் தேர்தலுக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படும் அமைச்சர் மகேஸ் பேட்டி