புதுச்சேரி…ஆற்றுபகுதியில் சுற்றுலா படகுகளை இயக்க எதிர்ப்பு…மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….கலாச்சாரத்தை சீரழிக்கும் சுற்றுலா புதுச்சேரிக்கு தேவையில்லை,என திமுக வலியுறுத்தல்…
புதுச்சேரியில் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென புற்றீசலை போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டன. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அனைத்தையும் புதுச்சேரி அரசு தடை செய்தது.
முறையாக அனுமதி பெற்ற பிறகே அனுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதன் அடிப்படையில் 300க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகுகளை இயக்க அரசின் அனுமதியை கேட்டுள்ளனர்.மீண்டும் சுற்றுலா படகுகள் இயக்க அரசு நடவடிக்கை எடுப்ப தாக தெரிகிறது.
இதனை எதிர்த்து ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலா படகுகளை இயக்குவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் இறால் முட்டைகள் முதல் குஞ்சுகள் வரை அழிந்து வருவதாகவும் கடல் வளமும் ஆற்று வளமும் பாதிக்கப்படுவதாக
ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற திமுக அமைப்பாளர் சிவா, சுற்றுலா என்ற பெயரில் ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு வெளிமாநிலத்தவரை கொண்டு படகுகளை இயக்குவது கண்டிக்க தக்கது.இதனை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டம் தொடரும்.புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்கு அறிவித்த எந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.சனி,ஞாயிறுக்கிழமைகளில் கலாச்சாரத்தை சீரழிக்கும் கலாச்சாரத்தை விரும்பவில்லை என திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.