என் காதலியை கூடதான் சங்கி என்று கூப்பிடுவேன்..அப்போ அவர் சங்கியா நக்கல் பண்ணிய சந்தானம்
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இப்படம் பல விமர்சனங்களை பெற்றாலும் நகைச்சுவையை பொருத்தமட்டில் இப்படத்தை ரசிகர்கள் வரவேற்றனர் என்று தான் சொல்ல வேண்டும். படம் வெளியானபோது சில சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதில், ‘சாமியே இல்லைனு ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தான நீ’ என்று குரல் கேட்க, சந்தானம், ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என்று பதில் சொல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது இது பெரியாரை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்று திராவிட கழகத்தினர் குரல் எழுப்ப அந்த கட்சியை தன் வளை பக்கத்திலிருந்து நீக்கினார்சந்தானம்.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் செய்தியாளர்கள் சந்தானத்திடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது நாங்கள் இப்படத்தில் பெரியாரின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை, வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணி டயலாக் அதைத்தான் படத்தின் டைட்டிலாக இயக்குனர் வைத்தார்.
கடவுளை வச்சு காசு பண்றவங்களை பத்தியும் அதே கடவுள் நம்பிக்கையை வைத்து அரசியல் பண்றவங்களை பற்றியும்’ இவ்வாறு பண்ணுவது தவறு என்று தான் இப்படத்தில் நாங்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றோம்.
சந்தானத்திடம் மேலும் செய்தியாளர்களில் ஒருவர் கேட்டதாவது உங்களை எல்லோரும் சங்கி என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு நான் ஆறாவது படிக்கும்போது சங்கீதா என்ற பெண்ணை காதலித்தேன் அவரை சங்கி சங்கி என்று தான் கூப்பிடுவேன். அதனால் அவர் சங்கி ஆகிவிடுவாரா என்று அவர் பானியில் நக்கலாக கேட்டார்.
புரிந்து கொண்டால் கோபதிற்குகூட அர்த்தம் உண்டு புரிந்து கொள்ள வில்லை என்றால் அன்பு கூட அபத்தமாக தான் தெரியும்… நக்கீரன் பிறந்த மண்ணில் சங்கி என்ற வார்த்தையை வைத்து சகட்டு மேனிக்கு மற்றவரை மட்டம் தட்டுவது அர்த்தமற்றதாக தான் தெரிகிறது..