in

கனடாவில் விமானத்தில் தினமும் கல்லூரி செல்லும் மாணவர்


Watch – YouTube Click

கனடாவில் விமானத்தில் தினமும் கல்லூரி செல்லும் மாணவர்

கனடாவில் வீட்டு வாடகை 1 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் மாணவர் ஒருவர் கல்லூரிக்கு தினமும் விமானத்தில் சென்று வருகிறார்.
கனடாவில் உள்ள calgary என்னும் பகுதியை சேர்ந்தவர் டிம் சென். இவர் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் பயின்று வரும் வான்கூவர் மற்றும் calgary நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 700 கிலோ மீட்டர். கல்லூரிக்கும் வீட்டிற்கும் தினமும் சென்று வர முடியாததால், வான்கூவரில் வாடகை வீடு தேடியுள்ளார். வான்கூவர் நகரத்தில் வீட்டு வாடகையை கேட்டால் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மிக அதிகமாக இருக்கும். வான்கூரில் உள்ள வீட்டில் வாடகை சுமார் $2100 டாலர் ஆகும். இது இந்திய மதிப்பின் படி ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

இதனால் அதிர்ச்சி அடைந்ந்த அந்த மாணவர் வீடு எடுத்து தங்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டார். இவ்வாறு அதிக வாடகையை செலுத்துவதை விட, தினமும் விமானத்தில் கல்லூரிக்கு சென்றுவிடலாம் என்று முடிவு செய்தார். மேலும், வான்கூவரில் அதிக வீடு வாடகை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஒரு வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் பல்கலைக்கழகத்திற்கு சென்று வர முடிவெடுத்தார். இதனால், ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்களுக்கு தோராயமாக $150 செலவாகும் என தெரிவித்தார். இது இந்திய மதிப்பின் படி 12,433 ஆகும். இது வான்கூவரில் உள்ள வீடு வாடகையை ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருப்பதாக அந்த மாணவர் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

மனைவியுடன் சேர்ந்து வாழ வழி தெரியாத நபரான மோடி குடும்பத்தை பற்றி பேசுகிறார் முத்தரசன் பேச்சு

கல்லல் அருகே மாசி உற்சவ விழாவை முன்னிட்டுமாட்டு வண்டி எல்லை பந்தயம்