in

கல்வியில் கடைசி மாவட்டம், மது விற்பணையில் முதல் மாவட்டம் விழுப்புரம் அன்புமணி ராமதாஸ் பேட்டி


Watch – YouTube Click

கல்வியில் கடைசி மாவட்டம், மது விற்பணையில் முதல் மாவட்டம் விழுப்புரம். அன்புமணி ராமதாஸ் பேட்டி.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் கல்வியில் கடைசி மாவட்டமாகவும், மது விற்பணையில் முதல் மாவட்டமாகவும்  விழுப்புரம் மாவட்டம் உள்ளது என பாமக. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற கப்பை கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் கோபால் – கௌசல்யா (எ) மீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வருகை புரிந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளிகளிடம் தெரிவித்தது.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமாகவும், மது விற்பணையில் முதன்மை மாவட்டமாகவும், அதிக குடிசைகள் உள்ள மாவட்டமாகவும், விழுப்புரம் உள்ளது. இதனை மாற்ற  தமிழக அரசு ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற்றத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வாருங்கள் என அறிஞர் அண்ணா நினைவு நாளில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் கஞ்சா விற்பணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சா அதிக விற்பணையாகும் மாவட்டம் திருவண்ணாமலை இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கஞ்சா விற்பணை அமோகமாக விற்பணையாகிறது. இதற்கு காரணம் ஆந்திராவில் இருந்து கஞ்சா இறக்குமதி செய்கின்றனர்.

ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

முதல்வரை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளேன்.

அமெரிக்காவில் என்ன போதை பொருள் கிடைக்கிறதோ அந்த போதை பொருட்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.

மதுவை கொடுத்து மூன்று தலைமுறைகளை நாசம் செய்துவிட்டார்கள்.

தற்போது கஞ்சைவை கொடுத்து நான்காவது தலைமுறையை கெடுத்து வருகின்றனர்.

இதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வருங்காலங்களில் பின்னுக்கு தள்ளபடும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் நிலை பாட்டை விரைவில் அறிவிப்போம்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டாக்டர் ராமதாசை சந்தித்தது மரியாதை நிமித்தமாகத்தான் இதில் அரசியல் பேசவில்லை. தென்பெண்ணையாற்றில் கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

இந்த உபரி நீரை பல திட்டங்களக்கு பயன்படுத்த வேண்டும். நந்தன்கால்வாய் திட்டத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்
று கூறினார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மயிலம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகுமார், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தினார்கள்

தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாசனம் செய்து உலக சாதனை