நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த வியாழனன்று போதையில் சாலைபணியாளரை வெட்டி படுகொலை செய்து, பிடிக்க வந்த காவலரையும் அரிவாளால் வெட்டிய பேச்சித்துரை என்பவரை காலில் சுட்டு பிடித்த போலீசார் அன்றிரவே சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 7ம் தேதி ohio state jersey Iowa State Football Uniforms asu football jersey OSU Jerseys College Football Jerseys ohio state jersey 49ers jersey College Football Jerseys OSU Jerseys florida state football jersey Ohio State Team Jersey Florida state seminars jerseys College Football Jerseys florida state football jersey OSU Jerseys வியாழக்கிழமை மாலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளி பகுதியில் சென்ற காரை வழி மறித்த தென் திருபுவனம் கிராமத்தைச் சேர்ந்த போதை ஆசாமிகள் இருவர், வாகனத்தில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் காரின் பின் பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர்.
அப்பகுதியில் சாலை பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த விருதுநகரை சேர்ந்த இளைஞர் கருப்பசாமி தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து போதையில் இருந்த இருவரும் கையில் வைத்திருந்த அரிவாளால், சாலை பணியாளர் கருப்பசாமியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அருகில் உள்ள திருப்புடைமருதூர் பகுதிக்கு சென்றவர்கள் அந்தவழியாக வந்த அரசு பேருந்து முன் பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர்.
காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்களை கைது செய்ய திருப்புடைமருதூர் பகுதிக்கு சென்ற நிலையில் வீரவநல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார் என்பவரை கையில் வெட்டிவிட்டு வாழை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டார். இந்த நிலையில் பேச்சித்துரை சீதபற்பநல்லூர் பகுதியில் தப்பி ஓடிய போது காவல் துறையினர் அவரை கால் முட்டில் சுட்டு பிடித்தனர். அன்றிரவே காயம் பட்ட பேச்சித்துரையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான சந்துரு என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சாலையில் சென்ற காரை தாக்கி சேதம் ஏற்படுத்தியது, சாலை பணியாளர் படுகொலை, காவலரை தாக்கியது, அரசு பேருந்தை சேதப்படுத்தியது ஆகிய சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் காலில் காயத்துடன் கடந்த நான்கு நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சித்துரை, சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் உயிரிழந்து விட்டார் என காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாத வண்ணம் தடுக்க காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.