தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் பிஜேபி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செஞ்சியில் பிஜேபி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை கூட்ரோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும், கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டிக்கிறோம், என்ன ஆச்சு, சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடு, கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு, உள்ளிட்ட கண்டன கோஷங்களுடன் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டத் தலைவர் ஏ டி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் செஞ்சி மண்டல தலைவர் ராமு தலைமையில் ஆரணி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தொழிலதிபர் கோபிநாத்,எம் எஸ் ராஜேந்திரன்,இவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
பிஜேபி கட்சி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க முடியும் என்றும்.
அயலக அணியின் மூலம் அயல்நாட்டு போதை பொருள்களை தமிழ்நாட்டில் ஊடுறவு செய்து பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தை சீரழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மன்னிக்க மாட்டார் மன்னிக்க மாட்டார் என கோசங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் தெரிவித்தனர்.