in

திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்


Watch – YouTube Click

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழாத்திருவிழா 7-ம் நாளான இன்று சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான மாசித்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாக்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சிவப்பு சாத்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி சண்முகருக்கு உருகுசட்ட சேவை நடைபெற்றது. .

சிவப்புச் சாத்தியை முன்னிட்டு பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சண்முகர் பின்புறம் நடராஜர் கோலத்தில் சிவன் அம்சத்தில் காட்சியளித்தார்.
நிகழ்ச்சியில் பக்தர்கள் சிவப்பு நிற உடை அணிந்து சுவாமியை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற அன்னையின் 146-வது பிறந்த நாள் விழா

விலைவாசி ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர், ஓட்டுநர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்