in

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சிங்கக் கேடய சப்பரத்தில் வீதி உலா


Watch – YouTube Click

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளியம்பாள் இரண்டாம் மண்டக படிகாரர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10 திருநாளான 23-ம் தேதி நடைபெறுகிறது.


Watch – YouTube Click

What do you think?

விவசாயி சின்னம் கிடைப்பதில் சீமானுக்கு சோதனை

தேசம் தழுவிய மறியல் போர் என அறிவித்து தொழிற்சங்க அமைப்புகள், விவசாய சங்கங்கள் இணைந்து போராட்டம்