in

நாகை அருகே பொரவாச்சேரி கந்தசாமி திருக்கோயில் பாலஸ்தாபனம் திருப்பணி தொடக்கம் விழா

நாகை அருகே பொரவாச்சேரி கந்தசாமி திருக்கோயில் பாலஸ்தாபனம் திருப்பணி தொடக்கம் விழா

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்த பொரவாச்சேரியில் பழமையான அருள்மிகு அன்னதான பிள்ளையார் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் வள்ளி தெய்வானையுடன் காணப்படுகிறார்.

எட்டுக்குடி, எண்கண், சிக்கல் மற்றும் பொரவாச்சேரி ஆகிய ஊர்களில் அமைந்த முருகனின் திருமேனிகள் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டதாகக் கூறுவர் முருகன் அழகிய திருவாட்சியுடன், தேவியர் இரு புறமும் இருக்க, நரம்பும், நகக்கண்களுடன் நகமும் தெரியும் அளவு சிறப்பான சிற்பாக மூலவர் உள்ளார்.

12 கரங்களுடன் இடது காலை மடித்து, வலது கால் தொங்கவைத்துக் கொண்டு பாம்பினைக் கவ்விய மயில் தன் இரு காலில் நிற்கின்ற நிலையில் காண முடியும் இத்தகைய சிறப்புற்ற முருகப் பெருமான் ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிவுற்று 14 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் மேற்கொள்ள ஆலய நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு பாலஸ்தாபனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது முன்னதாக சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி, யாகசாலை முதல் கால பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்ற மஹா பூர்ணாஹூதி நடந்தது தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களில் மல்லாரி ராகம் வாசிக்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

முன்னதாக அருள்மிகு அன்னதான பிள்ளையார் அருள்மிகு கந்தசாமி மூலவருக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மங்களப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கடம் அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கு பட ஸ்ம்யோஜனம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பிக் பாஸ் விக்ரமன், பெண் வேடமிட்டபடி இரவில் அடாவடி

சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண வைபவம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்