Paytm வங்கிக்கு ரூ.5.49 கோடி அபராதம்
பணமோசடி செய்ததற்காக Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்திய நிதி அமைச்சகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. அமைச்சகத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை Paytm பேமெண்ட் வங்கி மீது எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்ட அமலாக்க முகமைகளின் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் Paytm பேமெண்ட் வங்கியின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தை ஏற்பாடு செய்தல் மற்றும் எளிதாக்குதல் உட்பட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நெட்வொர்க்குகள் தொடர்பான சட்ட அமலாக்க முகவர்களிடமிருந்து குறிப்பிட்ட தகவலைப் பெற்றதன் பேரிலேயே, Paytm பேமெண்ட் வங்கியை FIU-IND எனப்படும் நிதி நுண்ணறிவு பிரிவு மதிப்பாய்வு செய்தது. இதை தொடர்ந்து Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்த காலக்கெடுவானது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.