in

பிரபல டைரக்டர் பிணமாக வீட்டில் மீட்பு

பிரபல டைரக்டர் பிணமாக வீட்டில் மீட்பு

‘மிழித்தலில் கண்ணீருமாய்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற மலையாள இயக்குனர் பிரகாஷ் கோலேரி, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார், செவ்வாய்கிழமை அன்று அவரது வீட்டில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவருக்கு வயது 65. பிரபல மலையாள டைரக்டர் ஆன பிரகாஷ் கோலேரி 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மிழித்தலில் கண்ணீருமாய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார்.

அவர் 1993-ல் வெளிவந்த ‘அவன் அனந்தபத்மநாபன்’ திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. 1999ல் ‘வருண் வரத்திரிக்கில்லா’ படத்திற்குப் பிறகு.

14 வருடம் கழித்து ‘பாட்டுப்புஸ்தகம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பினார். இவர் பாட்டு புத்தகம் படத்தின் முலம் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த இவர் அந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் பாடல்களை மட்டுமே இவர் எழுதியுள்ளார் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் கோலேரி வயநாட்டில் வசித்து வந்த பிரகாஷை இரண்டு நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பல இடங்களில் தேடி சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, அவரது வீட்டுக்குள் புகுந்து பார்த்தபோது பிரகாஷ் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தார், தகவல் அறிந்து போலீஸ் விரைந்து வந்தனர் பிரகாஷ் எப்படி இறந்தார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.

What do you think?

ராமாயணதிற்கு போட்டியாக களமிறங்கும் மகாபாரதம்.. ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?

ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்கி பக்னா.. க்கு கோவாவில் திருமணம்