in

மெல்போன் திரைப்பட விழாவிற்கு மாமனிதன் படம் தேர்வு … மாமனிதன் தலை நிமிர்ந்து நிற்கிறார்

மெல்போன் திரைப்பட விழாவிற்கு மாமனிதன் படம் தேர்வு … மாமனிதன் தலை நிமிர்ந்து நிற்கிறார்

 

நல்ல படங்கள் எப்பொழுதும் மக்களிடையே பேசப்படுவதும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்காமல் போகாது என்பது எழுதப்படாத நியதி, விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோர் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ படம் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

இந்த செய்தி படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளித்ததாக கூறியுள்ளனர். மாமனிதன் படத்துக்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்தனர், இளையராஜாவின் மகள் பவதாரணி பண்ணப்புரத்து என் சின்ன குயிலு என்ற பாடலை பாடியிருக்கிறார்.

மெல்போன் திரைப்பட விழாவிற்கு மாமனிதன் தேர்வானதை பவதாரணிக்கு சமர்ப்பிக்கின்றோம் என்று மாமனிதன் பட குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர், “அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்” என்ற அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் இயக்குனர் படத்தின் கதையே வைத்திருக்கிறார்.

அப்படியொரு சூழலில் தனது பிள்ளைகளை ஜெயிக்க வைத்து தலை நிமிர்ந்து வாழ தலைமறைவு வாழ்க்கையை வாழும் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய்சேதுபதி.

மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், குரு சோமசுந்தரம், அனிதா சுரேந்திரன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோம் நடித்துள்ளனர். மாமனிதன் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே திரையிடப்பட்ட பெருமையும் உண்டு.
ஒரு நல்ல திரைப்படம் பார்வையாளர்களை கதாபாத்திரங்களுடன் பயணித்தது போன்ற உணர்வை நிச்சையம் ஏற்படுத்தும்.

What do you think?

நாங்களும் அரசியல் காட்சி ஆரம்பிப்போம்..ஆம்…மா.. ஆனா எப்போ ஆரம்பிப்பேன் எனக்கே தெரியாது

ஸ்ருதியை வைத்து என்ன..பா பண்ற லோகி… பதில் தெரியாம காண்டாவுது தல