தென்காசி நகராட்சியில் ரூ5 கோடி 32 லட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை மார்க்கெட்க்காண அடிக்கல் நாட்டும் பணியை நகர மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்
தென்காசி -திருநெல்வேலி மெயின் ரோட்டில் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இதில் சுமார் 20 கடைகள் சாலையோரம் வெளிப்பக்கமாகவும், 70க்கும் மேற்பட்ட கடைகள் சந்தையின் உட்புறம் என 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தினசரி சந்தையானது எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்பட்டது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் தினசரி சந்தையானது முற்றிலுமாக அகற்றப்பட்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சந்தை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூபாய் 5கோடி 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் சந்தையை தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த வருட இறுதியில் சந்தைக்கான கட்டிட பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தென்காசி நகராட்சி பூங்காவில் தினசரி சந்தையானது தற்காலிகமாக
இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.