அம்மாவிடம் சண்டை ஏன் ? பவித்ரா ஜனனி பதில்
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் மூலம் பல ரசிகர்களின் ஃபேவரிட் நாயகியாக ஆனவர் பவித்ரா ஜனனி.
அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலிலும் நடித்தார் தற்பொழுது அவர் எந்த சீரியலிலும் கமிட்டாக வில்லை என்றாலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பவித்ராவுக்கு இன்ஸ்டாவில் ஏராளமான ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகிறார்கள்.
பவித்ராவுக்கு தற்பொழுது 32 வயதாகிறது ஆனால் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க…..திருமணம் பற்றி அவர் அம்மா வீட்டில் பேசினால் முடிவே முடியாது என்று கோபப்படுவாராம் திருமணம் செய்து கொள்ளும் மைண்ட் செட் எனக்கு இல்லை திருமணம் தான் எல்லாத்துக்கும் தீர்வு என்ற எண்ணத்தை என்னிடம் திணிக்காதிர்கள் என்று என் வீட்டில் நான் கூறுவேன் ..
ஏன் திருமணம் செய்யாமல் இந்த உலகத்தில் தனியாக வாழ முடியாதா ஜெயிக்க முடியாதா என்று பவித்ரா ஜனனி கேட்டுள்ளார்.