அரசு வழங்கிய மரக்கன்றுகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் காய்ந்து குப்பையாகி கிடைக்கிறது
சில ஆண்டுகளாகவே பூமி வெப்பநிலையாவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதனால் உலக நாடுகள் புவி வெப்பமயம் ஆவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக இந்தியாவில் தமிழகம் வெப்பமயமாவதை தடுப்பதற்காக மரங்களை அதிகமாக நட்டு வளர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன
பெரிய குலங்களின் நடுவில் குன்று அமைக்கப்பட்டு குறுங்காடுகள் உருவாக்குவது சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு 100 நாள் வேலை ஆட்களை கொண்டு பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் எப்படி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் செல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு செல்வார் அதேபோல் மாவட்ட ஆட்சியரும் மரக்கன்றுகளை நடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவார் அப்படியே அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் மரக்கன்றுகளை நடுவதில் இருக்கும் ஆர்வம் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு இல்லை போலும் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு வகையான 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் காய்ந்து குப்பை போல் அதிகாரிகள் வாகன நிறுத்தும் இடத்தில் கிடைக்கிறது
இதை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் இப்படி வீணடிக்கப்படும் மரக்கன்றுகளை திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தால் அவர்கள் தனது வீடுகளில் வைத்து பராமரிப்பார்கள் பல இடங்களில் தற்போது 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதக்கும் நேரத்தில் நேரத்தில் கூட அதிகாரிகளுக்கு மரக்கன்றுகளின் முக்கியத்துவம் தெரிய ப்படவில்லை என சமுக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்