தமிழகத்தில் சனாதன தர்ம யாத்திரையை துவங்கியுள்ள ஆந்திரம் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் மற்றும் சுவாமிமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
முருகக் கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலான கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் சுவாமிநாத திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சனாதன தர்ம யாத்திரையை துவங்கியுள்ள ஆந்திரம் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சுவாமிமலை முருகன் கோவிலில் தன் மகனுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும் சாமி தரிசனத்தை மேற்கொண்டார். அப்போது கல்லூரி மாணவர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் இவரை காண குவிந்தனர்.
இந்த கோவில் உள்ள மூலவர் சுவாமிநாதனாக பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவில் ஒரு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இங்கு 60 படிகள் உள்ளன. அவை தமிழ் வருடங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.