ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ஆடுகளம் நடிகர்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மற்றும் எழுத்தாளரான வி.ஐ.எஸ். ஜெயபாலன்.
இலங்கையில் பிறந்த இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்தவர்.
12 கவிதைகள் மற்றும் சிறுகதைகளை வெளியிட்டவர், இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக ஜெயபாலன் நோர்வேயின் ஒஸ்லோவுக்குச் சென்றார், ஆனால் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடுக்கு வந்தார். ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய இவர், பின் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்தார்.
ஜெயபாலன் கவிதை ஆங்கிலம், நோர்வே மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு’ Wilting Laughter’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது, கனடாவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில், தற்போது கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நலம் சரியில்லாம ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் ஜெயபாலன் . மேலும் இவருடைய குடும்பம் பிரான்ஸ் நாட்டில் இருப்பதினால், அவரை கவனித்து கொள்ள யாரும் இல்லை என கூரபடுகிறது.. அவர் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது