நெல்லை தாமிரபரணி ஆற்றல் பாதுகாக்கும் வகையில் ஆற்றங்கரைகளில் 2000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் தாக்ரேசுபம்ஞானதேவ்ராவ் தொடங்கி வைத்தார்.
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் வகையில் தூய்மை படுத்தும் பணி மாவட்ட நிர்வாகம், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது் கடந்த வாரம் நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
அப்போது தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் வகையில் ஆற்றங்கரைப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இந்திய சிமிமெண்ட்ஸ் நிறுவனம் வி.எம்.சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஆகிவற்றுடன் மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் இணைந்து தாமிரபரணி ஆற்றில் 2000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தாக்ரேசுபம்ஞானதேவ்ராவ் கலந்து கொண்டு மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். மணிமூர்த்திஸ் வரம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் வரை சுமார் 5 கிலோமீட்டர் அரசு, புங்கை, வாகை ஆகிய மரங்கள் ஆற்றின் இரு கரைகளிலும் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள துறை தலைவர் நாராயணசாமி, முதுநிலை மேலாளர் ராஜேஷ் மேலாளர்கள் சித்திரவேல் ஜிஜூ மற்றும் வி எம் சத்திரப்பகுதியில் அமைந்துள்ள டெவலப்மென்ட் டிரஸ்ட் நிறுவனத்தார் கலந்து கொண்டனர்.