in

இலங்கை கடற் கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடிப்பு


Watch – YouTube Click

இலங்கை கடற் கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடிப்பு

இலங்கை கடற் கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடிப்பு: கரை திரும்பிய மீனவர்கள் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறையில் இருந்து நேற்று மதியம் ராமன் மற்றும் பொன்னுதுரை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் பொன்னுதுரை, ஜெயச்சந்திரன், ராமன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு பைபர் படகில் 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி இவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு 5 மீனவர்களையும் விரட்டி அடித்துள்ளனர். அச்சமடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக ஆறுக்காட்டுதுறை கடற்கரைப் பகுதியை வந்து சேர்ந்தனர் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்