in

உலக நன்மை வேண்டி உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை:

உலக நன்மை வேண்டி உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை:

உலக மக்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கத்திலும், உலக நன்மை வேண்டி கங்கோத்ரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சாஷ்டாங்க நமஸ்காரம் (ஊர்ந்தபடி) செய்தபடி சாமியார்கள் யாத்திரையாக இன்று ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

சாமியாரை சாலையில் சென்ற பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம், கங்கோத்ரியை சேர்ந்தவர் சுவாமி ராஜ்கிரி மகராஜ் (52). இவர் உலக மக்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கத்திலும், உலக நன்மை வேண்டியும் உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி முதல் ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் தெர்மாகோல் போட்டு படுத்து எழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் (ஊர்ந்தபடி) எனும் யாத்திரையை கடந்த 2023 ஏப்., 14ல் தொடங்கி 16 மாதங்களாக உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா வழியாக,தமிழகத்திற்குள் நுழைந்து இன்று மதியம் ராமேஸ்வரம் நுழைவு பகுதியை வந்தடைந்தார்.

உலக மக்கள் அனைவரும் அமைதியும் நலமுடன் வாழ இந்த யாத்திரையை துவக்கியதாகவும், உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் இது போன்ற சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி ராமேஸ்வரம் நோக்கி யாத்திரை வந்ததாகவும், வழிநெடுகிலும் பக்தர்கள் தங்களுக்கு உற்சாகம் அளித்து உணவுகளை பரிமாறியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நாள்தோறும் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரம், இதுபோன்ற சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த படி யாத்திரையாக ராமேஸ்வரம் வந்ததாக ராஜ்கிரி மகராஜ் தெரிவித்தார்.

சாலையில் ஊர்ந்தபடி யாத்திரையாக ராமேஸ்வரம் வந்த சாமியார்கள் பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

What do you think?

மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் – பணிகள் பாதிப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை ஒரே நாளில் பாபநாசம் அணை 6 அடி உயர்ந்தது