in

எனக்குள் இருந்த புது நிரோஷாவை …ஐஸ்வர்யா வெளிகொண்டு வந்தார்

எனக்குள் இருந்த புது நிரோஷாவை …ஐஸ்வர்யா வெளிகொண்டு வந்தார்

 

எனக்குள் இருந்த புது நிரோஷாவை …ஐஸ்வர்யா வெளிகொண்டுவந்தார்.. ரஜினி சாருடன் நடித்ததால் என் சினிமா வாழ்கை பூர்த்தியாகிவிட்டது.

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நிரோஷா தன் அனுபவம் பற்றி பேட்டி அளித்துள்ளார், நான் எல்லா நடிகர்களுடனும் நடித்து விட்டேன். ரஜினி சாரோட மட்டும் தான் அடிக்க வில்லை ரஜினி சார் உடன் லால் சலாம் படத்தில் நடித்த பிறகு தான் என் சினிமா வாழ்க்கையே கம்ப்ளீட் ஆனதாக உணர்கிறேன்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் சந்தோஷமடைந்தேன் ஆனால் சில காரணங்களால் சூட்டிங் தள்ளி போனதும் இந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார்களோ என்ற பயம் கூட எனக்கு இருந்தது. நான் கடைசி நேரத்தில் தான் அக்ரீமெண்டரி சைன் பண்ணேன் ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங் முடிந்த பிறகு கூட நான் ரஜினி சாருக்கு தான் ஜோடி என்று தெரியாது சூட்டிங் போக போக தான் நான் ரஜினி சாருக்கு ஜோடி என்று கேள்விப்பட்ட உடனே நானா … நானா அவருக்கு ஜோடி என்று என்னையே நான் கிள்ளி பார்த்துக் கொண்டேன்.

தலைவருடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது அவர் ஒவ்வொரு ஷாட்டும் நடித்துவிட்டு இது ஓகேவா என்று எங்களை பார்த்து கேட்பார் சிம்ப்ளிசிட்டில தலைவரை அடிச்சுக்கவே முடியாதுப்பா ஒரு காட்சியில கிரிக்கெட்டை ரொம்ப ரசிச்சு பார்ப்பாரு நாங்களும் அவரையே ரசித்து பார்க்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும்.

அந்த காட்சியில் உண்மையிலேயே அவரின் ஆக்டிங்கை நாங்கள் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம் அப்படிப்பட்ட எக்ஸ்ட்ராடினரி ஆக்டர் அவர்,  ரஜினிகாந்த் சார் அவர்கள் செட்டில் இரூக்கும் போது யார் நடித்தாலும் சூப்பர் நன்றாக நடிக்கிறீர்கள் என்று உடனே அப்ரிஷியேட் பண்ணுவார் கீப் இட் அப் அப்படி என்று சொல்வார் ஒரு லெஜண்டே நம்மளை பாராட்டுகிறார் என்ற சந்தோஷம் எங்கள் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்.

மேலும் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகை நானும் என் அக்காவும் கைவீசம்மா கைவீசம்மா என்ற படத்தில், நான் ரஜினி சாராக இந்த படத்தில் நடித்திருப்பேன், ஆனால் இப்பொழுது ரஜினி சார் கூடவே நடிக்கும் பாக்கியம் கிடைத்த போதுதான் என்னுடைய ட்ரீம் ஃபுல் ஃபீல் ஆகிவிட்டது என்றார்.

மேலும் மற்ற நடிகர்களை பற்றி கூறும் போது அவர்களும் அருமையாகவே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள், ஐஸ்வர்யாவின் டைரக்ஷன் பற்றி சொல்லவேண்டும் என்றால் ஐஸ்வர்யா ரஜினி மகள் என்பதை மறந்து பீல்டில் இறங்கி வேலை செய்வார்.

நான் இப்படத்தில் என்னுடைய ஓன் ஸ்டைல் ஆஃப் ஆக்டிங்கை கொடுக்கவில்லை அவர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாரோ அதைத்தான் நான் நடித்தேன் எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த புது நிரோஷாவை அவர் வெளி கொண்டு வந்து விட்டார், என்னை அறிமுகப்படுத்திய மணிரத்தினத்தின் படம் எப்போது வரும் என்று ஆவலாக எதிர்பார்த்தேனோ அதே மாதிரி லால் சலாம் படத்தின் ரிசல்ட் இப்படி இருக்கும் என்று excited,…டாக இருக்கிறேன்.

கடைசியாக விஜயகாந்த் பற்றி அவர் கூறியதாவது எனக்கு செந்தூரப்பூவே என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தது அவர்தான் ஆபாவாணன் சாரிடம் சண்டை போட்டு எனக்கு அந்த ரோலை வாங்கி கொடுத்தார். பயங்கரமாக ஹிட் அடித்த படம் அது அதற்கு நான் விஜயகாந்த் சாருக்கு தான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

அவர் இறப்பில் நான் கூறியதை தான் இப்போதும் கூறுகிறேன் எல்லோரும் பணம் சம்பாதிர்கள் புகழ் சம்பாதிப்பார்கள் ஆனால் இவர் நல்ல மனிதன் என்ற பெயரை சம்பாதித்து விட்டு சென்று இருக்கிறார் அவர் இல்லையே என்ற குறை தான் இப்போதும் இருக்கிறது.

What do you think?

தமிழ்நாட்டு மருமகளாக,,, ஆக போகும் Samantha

திருச்சியில் NIA அதிகாரிகள் இரண்டு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்