என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை
என்னையே ஏன் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் புரியவில்லை என்று கோபம் கொப்பளிக்க கேள்வி கேட்டார் நடிகை பாவனா .தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா தமிழில் வாய்ப்பு குறையவே இவர் மலையாளம் மற்றும் கன்னடத்திலும் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் . Romeo’ என்ற கன்னட படத்தில் பாவனா நடிக்கும் போது அப்படத்தின் producer….ரான நவீன் …னுடன் பழக்கம் ஏற்பட்ட பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடத்துக் கொண்டிருக்கிறார் பாவனா .அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் எனக்கு மலையாள திரையுலகில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன நான் தற்பொழுது இரண்டு மலையாள படங்களில் கமிட் ஆகி உள்ளேன் மேலும் நான் சமூக வலைத்தளங்களில் ரசிகருடன் உரையாடுவதும் இல்லை என்னைப் பற்றிய பர்சனல் விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் இல்லை ஆனால் எனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை ஏன் வெளியிடவில்லை என்று சிலர் கேள்வி கேட்கின்றனர் அப்படி நான் வெளியிடாத காரணத்தால் நான் அவரை விவாகரத்து செய்து விட்டதாக தற்பொழுது வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது இப்படித்தான் இருக்கும் என்று அவர்களே ஒரு அனுமானத்தில் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு நான் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும் அவர்கள் சொல்வது பொய் என்று நான் எதற்காக நிரூபிக்க வேண்டும் ஒவ்வொருத்தரிடமும் நான் போய் நான் என் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க என்னால் முடியாது மேலும் இவர்களுக்காக நாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடவும் முடியாது மற்றவர்களைப் போல் நான் அப்படியெல்லாம் புகைப்படங்களை வெளியிட மாட்டேன் என்று கோபமாக கூறியுள்ளார் பாவனா