எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி
தமிழ்நாட்டில் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற யாத்திரையை நடத்தி வந்தார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி ” தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இதயங்களில் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க சில கொள்ளையர்கள் தடுக்கின்றனர். சிலர் தங்களின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றனர். நண்பர்களே தமிழ் மொழி, பண்பாடு மிகவும் நெருக்கமானது மட்டுமல்ல; சிறப்பு வாய்ந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் நான் படித்த தமிழ் கவிதைகளை படித்தேன். காசி தமிழ் சங்கம், செங்கோல் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறேன். தமிழகத்துக்கும், எனக்கும் அரசியல் ரீதியான உறவு மட்டும் இல்லை; இதயத்தோடு தொடர்புடைய உறவு உள்ளது. ஏனென்றால் நான் பல ஆண்டுகளாக தமிழ் மண்ணோடு பின்னி பிணைந்து இருக்கிறேன்.1991ல் நான் ஏக்தா யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்க தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசி என்னுடைய யாத்திரையை தொடங்கினேன். இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்ஜிஆர் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை செய்தவர்.
எம்ஜிஆர் ஏழைக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்ஜிஆர் குடும்ப அரசியல் செய்யவில்லை, அவருக்கு பிறகு தமிழ்நாட்டின் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே. அதனால்தான் திமுக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இழிவு செய்து ஆட்சி நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் சமீபத்தில் முடிந்தது இந்நாளில் அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள், காங்கிரஸ் கொடுத்ததை விட 3 மடங்கு அதிக நிதியை பாஜக கொடுத்துள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது என்றார் மோடி.