in , ,

ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடம்


Watch – YouTube Click

ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது.

ஐசிசி, தங்களது டெஸ்ட் தரவரிசையை வருடம்தோறும் புதிப்பித்து கொண்டே இருப்பார்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.

இந்த மிகப்பெரிய வெற்றி ஆஸ்திரேலிய அணியின் தரவரிசை புள்ளியை 124-ஆக உயர்த்தியுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியுடன் போட்டி இட்ட இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3-வது இடத்தில் உள்ளது. வெகு நாட்களாக முதலிடத்தில் இந்திய அணி இருந்து வந்த நிலையில் டெஸ்ட் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோற்றத்தன் காரணமாக தற்போது இந்த முதலிடத்தை தவறவிட்டுள்ளது.

அதே நேரம் இந்திய அணி டெஸ்ட்டில் முதலிடத்தை தவறவிட்டாலும், டி20 மற்றும் 50 ஓவர் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இந்திய அணி இன்னும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அதில் 264 புள்ளிகளுடன் இந்திய அணி டி20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு பின்னால் 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி 257 புள்ளிகளுடன் இருக்கிறது.

அதே போல ஒரு நாள் போட்டியின் தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அந்த தரவரிசையிலும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பின்னால் 116 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு பிறகு நடைபெறு சர்வேதேச டெஸ்ட் போட்டி தொடர்களில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் அந்த டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம் என கருதப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

டக் அவுட் எத்தனை வகை இருக்கு தெரியுமா

புலம்பி தள்ளும் ஹர்திக் பாண்டியா