ஒற்றை தீக்குச்சியில் கலைஞரின் பேனாவை வடிவமைத்து முதல்வருக்கு பரிசளிக்க விரும்பும் நூண்கலை ஓவியர்.அறிஞர்களுக்கு தீப்பொறி பேனா…அந்த தீப்பொறிக்கு காரணமான தீக்குச்சியை பேனாவாக வடிவமைத்ததாக பேட்டி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரதேசி கோபிராம் வயது 54. இவர் ஓவிய ஆசிரியராக 5 வருடம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவர் கடுகில் உலக வரைபடத்தை வரைந்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நுண் கலை ஓவியம் மூலம் செய்து வருகிறார். இந்த நிலையில் கலைஞரின் பேனா கடலில் நிறுவப்பட உள்ள நிலையில் ஒரு தீக்குச்சியில் இரண்டு மில்லி மீட்டர் அகலமும் இரண்டு சென்டிமீட்டர் உயரமும் உள்ள கலைஞரின் பேனாவை செய்து அசத்தியுள்ளார்.
மேலும் கலைஞரின் பேனா பேசுகிறது என கவிதையும் எழுதி உள்ளார்..நீ என்னை தொட்டதால் உன் புகழ் விண்ணை தொட்டது.
உன் உடல் மண்ணை தொட்டது.. என்னைத் தொட நீ இல்லையே.. நீ விண்ணில் சென்றாலும்.. மண்ணில் உன் புகழோடு வாழ்வேன்…நீ அளித்த மை எனக்கு உணவு.. நீ இல்லாமல் நான் உண்பேனா.. அன்புடன் உன் பேனா… என்ற கவிதையை எழுதி வாசித்துள்ளார்.
மேலும் அறிஞர்களுக்கு எழுதுகோல் ஒரு தீப்பொறி தீப்பொறிக்கு காரணம் ஒரு தீக்குச்சி எனவே ஒரு தீக்குச்சியில் இரண்டு மில்லி மீட்டர் அகலமும் இரண்டு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட கலைஞரின் பேனாவை வடிவமைத்துள்ளதாகவும் இந்த பேனாவை தமிழக முதலமைச்சரிடம் கொடுக்க வேண்டும் என தான் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துளார்.