யாழ்ப்பாணம் – கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. பாதுகாப்பு எண்ணிக்கையில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தகவல்.
வரும் 23 ஆம் தேதி துவங்கஉள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் மற்றும் மதகுருமார் உட்பட 3500 பேரும், இலங்கையில் இருந்து சுமார் 4000 பேரும் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு எண்ணிக்கையில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பறவைகள் விலங்குகள் மற்றும் அது சம்பந்தமான எந்தவித பொருட்களும்(சிறகுகள், எடுத்து வர கூடாது.மது போதை போன்ற பொருட்களும் கச்சத்தீவிற்குள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பணம் மாற்றுவதற்கு இலங்கை நாட்டைச் சேர்ந்த இரண்டு வங்கிகளும் கச்சத்தீவில் திருவிழா அன்று செயல்படும் என செய்தியாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்