in

கரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பொதுக்குழுகூட்டம்


Watch – YouTube Click

கரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பொதுக்குழு கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கரூர் மாநகராட்சி உட்பட்ட பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் தமிழரசன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் செல்வராணி , மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும், அரசின் புதிய திட்டங்களை நிறைவேற்றி புதிய கால அவகாசம் அளிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் நவீன மனு நில அளவை திட்டம், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவிகளை தரம் உயர்த்தி வழங்க வேண்டும், நில அளவை துறையை தொழில்நுட்ப துறையாக அறிவிக்க வேண்டும், நில அளவை களப்பணியாளர்களின் உட்பிரிவு செய்யும் நடைமுறையில் விதி திருத்தம் செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்து உட்பிரிவு செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை கலைத்திட வேண்டும், கூடுதல் இயக்குனருக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும், புற ஆதார முறையில் புல உதவியாளர்களை நியமனம் செய்யவும் அரசாணை எண் 297ஐ ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி எந்த கட்சியும் வரக்கூடாது

பிரியாணி பிரியர்கள் புகார் முக்கிய சாலையில் கூட்டம் கூடியதால் பரபரப்பு