in

கல்லல் அருகே மாட்டுவண்டி பந்தயம் 48 ஜோடி மாடுகள் பங்கேப்பு


Watch – YouTube Click

கல்லல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம். 48 ஜோடி மாடுகள் பங்கேப்பு.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. செம்பனூரில் இருந்து மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாட்டில் 16 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டில் 32 ஜோடி மாடுகளும் என மொத்தம் 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

பெரிய மாட்டிற்க்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இப்போட்டியில், வெற்றி முதல் இடத்தை பெற்ற பெரிய மாட்டின் உரிமையாளருக்கு ரூ 25 ஆயிரம் ரொக்கமும், இரு பிரிவுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பந்தயத்தில் இரு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்த உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ20 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் மாடுகள் ஒன்றோடு ஒன்று முந்தி கொண்டு சீறி பாய்ந்து சென்றது.

மிகவும் விறுவிறுப்பாக, நடைபெற்ற போட்டியினை, செம்பனூர், கல்லல், ஆலவிளம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ளபல கிராமங்களை சேர்ந்த ஏராளமான
பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டு ரசித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கட்டப்பட்ட ஒற்றையடி பாலத்தை உயர் மட்ட பாலமாக மாற்றுவதற்காக அடிக்கல் நாட்டினர்

சீரியல் நம்பர்கள் எங்கே? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி SBIக்கு கடும் நெருக்கடி