காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடந்த 01.02. 2024 அன்று புதுடெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் மேகதாட்டில் அணை கட்டி கொள்ளலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் அதன் தலைவர் எஸ் கே.ஹெல்தர் அதற்கான ஒப்புதலை கர்நாடகா அரசுக்கு இந்திய அரசின் நீராற்றல் துறை வழங்கலாம் என்று நிறைவேற்றிய தீர்மானம் கூறுகிறது
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டுக்கு 177.5 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் மாதவாரியாக திறந்து விட வேண்டும் உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை ஒரு தடவை கூட கர்நாடகமும் காவேரி ஆணையமும் செயல்படுத்தியதில்லை ஆணைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகதாட்டு அணை ஆதரவு தீர்மானத்தை தமிழக அரசு இதுவரை கண்டிக்காதது ஏன் எனவும் காவேரி உரிமை மீட்பு குழு சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை பனங்கல் கட்டிடம் முன்பு திடீரென காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் காவேரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது