in

கிராமிய விருதை தட்டி சென்ற இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் இசை குழு..

கிராமிய விருதை தட்டி சென்ற இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
இசை குழு..

இசை துறையின் உயரிய விருதான கிராமிய விருது, இசை, பாப் நடனம், ராக் என பல பிரிவுகளின் கீழ் இவ்விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 66 ஆவது கிராமிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த ஆல்பம் என்ற பிரிவில் இந்தியாவின் சக்தி இசை குழுவிற்கு கிராமிய விருது வழங்கப்பட்டது.

இந்த குழுவினர் உருவாக்கிய ‘திஸ் மொமெண்ட்’ என்ற இசை ஆல்பத்திற்கு இவ்விருது கிடைத்தது இக்குழுவில் பாடகர் சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் செல்வகணேஷ், ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் இணைந்து மொத்தம் எட்டு பாடல்களை உருவாக்கி இவ்ஆல்பத்தை வெளியிட்டனர். இவ்விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சங்கர் மகாதேவன் கூறியதாவது எங்கள் குழு குடும்பத்தினர் கடவுள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி.

இந்தியாயை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இசையமைப்பாளர் செல்வகணேஷ் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நில் கவனி செல்லாதே போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை என்பது மொழியை மீறிய ஒரு கலை வடிவம் என்பதை நம் இசை விஞ்ஞானிகள் நிருபித்துவிட்டார்கள். ‘இசை இல்லாத வாழ்க்கை ஒரு பாலைவனத்தின் வழியாக பயணம்’ செய்வதைப் போன்றது என்று பாட் கான்ராய் கூறியுள்ளார்.

What do you think?

லால் சலாம் படத்தை திரையிட தடை ..கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. கடைசிநேர கடுகடுப்பு

ஆசை என்பது ஒரு புள்ளி. சாதனை என்பது இன்னொரு புள்ளி